பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலுக்கு தள்ளிய கணவர்.. செம ஸ்கெட்ச் போட்டு போலீசில் சிக்க வைத்த மனைவி!



 சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண் ஜோஷி. மெக்கானிக்கல் பட்டதாரி. பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரியான இளம்பெண்னுக்கும், அருண் ஜோஷிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் காதல் திருமணம் நடந்தது.


இதனை தொடர்ந்து அருண் ஜோஷி கடந்த மே மாதம் பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அந்த வேளையில் அவரது மனைவி வீட்டில் இருந்த கணினியை பயன்படுத்தியுள்ளார். அப்போது அவருக்கு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.


கணினி முழுவதும் ஆபாச படங்கள்

கணினியில் பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். அருண் ஜோஷி பல பெண்களிடம் ஆபாசமாக உரையாடிய வீடியோக்களும் அதில் இருந்தது. கணவன் வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழ்நாட்டில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் மனைவிக்கு தெரியவந்தது.


திட்டம் போட்ட மனைவி

தவறு செய்தது கணவர் என்றாலும் இப்படிப்பட்ட நபரை கண்டிப்பாக போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும் என்று அந்த இளம்பெண் முடிவு செய்தார். கணவனை போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்க திட்டம் போட்டுள்ளார். இதற்காக இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு பெண் பெயரில் போலியாக ஒரு பக்கம் துவங்கிய அவர் கணவருக்கு ரிக்கியூஸ்ட் அனுப்பியுள்ளார்.


மனைவியிடமே ஆபாசமாக பேச்சு

இதனை உடனே ஏற்றுக் கொண்ட அருண் ஜோஷி, இளம் பெண் ஒருவர்தான் தன்னிடம் பேசுகிறார் என நினைத்து தனது மனைவியிடமே ஆபாசமாக பேசி வந்துள்ளார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவர், '' நீ பாலியல் தொழிலில் ஈடுபட்டால் விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம்'' என்று ஆசை வார்த்தைகள் கூறியதுடன் சில பெண்களின் படங்களையும் அனுப்பி உள்ளார்.


ஆசையாக உள்ளது

அப்போது அந்த பெண் கணவரிடம் 'நான் அடையாறு பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபர் மகள், உங்களை காதலிக்கிறேன். உங்களை சந்திக்க வேண்டும் என ஆசையாக உள்ளது'' என்று கூறியுள்ளார். இந்த வார்த்தையால் சொக்கி போன அருண் ஜோஷி உடனடியாக சென்னை வருவதாக கூறியுள்ளார். இளம்பெண்ணே கணவருக்கு டிக்கெட் புக் செய்து கொடுத்துள்ளார்.


காத்திருந்த அதிர்ச்சி

சென்னை திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வரும்படி கூறியுள்ளார். இதனால் பஹ்ரைன் நாட்டில் இருந்து உடனடியாக சென்னைக்கு பறந்து வந்த அருண் ஜோஷி திருவான்மியூரில் உள்ள விடுதிக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. விடுதியில் மனைவி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தன்னை பிடிக்க மனைவி செய்த திட்டமிட்ட நாடகம்தான் இதெல்லாம் என்பது அவருக்கு தெரியவந்தது.


காத்திருந்த அதிர்ச்சி

சென்னை திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வரும்படி கூறியுள்ளார். இதனால் பஹ்ரைன் நாட்டில் இருந்து உடனடியாக சென்னைக்கு பறந்து வந்த அருண் ஜோஷி திருவான்மியூரில் உள்ள விடுதிக்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. விடுதியில் மனைவி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தன்னை பிடிக்க மனைவி செய்த திட்டமிட்ட நாடகம்தான் இதெல்லாம் என்பது அவருக்கு தெரியவந்தது.


கையும், களவுமாக பிடித்த போலீசார்

அருண் ஜோஷியின் மனைவி இதுபற்றி ஏற்கனவே போலீசில் கூறி இருந்ததால்,அங்கு மறைந்திருந்த போலீஸார் அருண் ஜோஷியை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். மனைவியின் தந்திர யூகத்தால் அந்த கொடூரன் போலீசில் சிக்கி விட்டான். அருண் ஜோஷி இதுபோல் வேறு எந்த இளம்பெண்களை ஏமாற்றி வந்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.